Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு கணிதம் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

hindutamil-prod%2F2026-03-26%2Fu4z6kqic%2F7 
தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் கணிதப் பாடத்​துக்​கான தேர்வு நேற்று நடை​பெற்​றது.
 

இந்​நிலை​யில் கணிதத் தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து ஆசிரியர்​கள், மாணவர்​கள் கூறும்​போது, “கணிதப் பாடத்​துக்​கான வினாத்​தாளில் பெரும்​பாலும் எளி​தான வினாக்​களே இடம் பெற்​றிருந்​தன.

எனினும், ஒரு மதிப்​பெண் பகு​தி​யில் 2 கேள்வி​களும், இரு மதிப்​பெண் பகு​தி​யில் கட்​டாய வினா​வும் கடின​மாக இருந்​தன. அதே​போல், 5 மதிப்​பெண் பகு​தி​யில் பெரிதும் எதிர்​பார்த்த தேற்​றம் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளித்​தது. இதனால் சென்​டம் எண்​ணிக்கை குறைய வாய்ப்​புள்​ளது” என்​றனர்.

பத்​தம் வகுப்பு அறி​வியல் பாடத்​தேர்வு மார்ச் 30-ம் தேதி நடை​பெறவுள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ஏப்​.6-ம் தேதி​யுடன் தேர்வு முடிவடைய உள்​ளது. தேர்வு முடிவு​கள் மே 20-ல் வெளி​யிடப்பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive