Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2026

யூரி அலெக்சியேவிச் ககாரின்




 






திருக்குறள்: 

குறள் 844: 

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு. 

விளக்க உரை: 

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

பழமொழி :

A guilty conscience pricks. 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீணே.

பொது அறிவு : 

01.இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

டாக்டர்.ஹோமி ஜஹாங்கீர் பாபா  -Dr.Homi J. Bhabha

02.இந்தியாவில் நவீன வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் (பசுமைப் புரட்சி) சிற்பி என்று அழைக்கப்படுபவர்யார்?

டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் 
Dr.M.S. Swaminathan.

English words :

Doodle – Drawing absent-mindedly

Scratch – Rough, quick writing

தமிழ் இலக்கணம்: 

அறிவோம் தமிழ் 

இன்று ஐவகை நிலங்களில் ஆடவர் எவ்வாறு அழைக்கப் படுகின்றனர் என்று காண்போம்

மருதம் - கடையர் 

நெய்தல் - பரதர்

பாலை- எயினர்

முல்லை- இடையர் 

குறிஞ்சி - வேடுவர்

அறிவியல் களஞ்சியம் :

மேகத்தின் எடை சுமார் 10 லட்சம் பவுண்டுகள் (million pounds) வரை இருக்கலாம். 

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது. 

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. 

நீதி:

தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

இன்றைய செய்திகள்

27.03.2026


⭐தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு

⭐தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் நடவடிக்கையில் இதுவரை ரூ.34.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

⭐ புதுச்சேரியில் வழிப்பறி செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய முகமூடி கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக புதியவர்கள் களமிறங்குவார்கள் என அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

🏀 'டி-20' அரங்கில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் உள்ளிட்டோருடன் இணைந்தார் அமேலியா கெர்.

Today's Headlines

⭐ In Tamil Nadu, toll fees at 60 toll plazas will be increased by up to 5% starting from April 1st.

⭐ In Tamil Nadu, flying squads and surveillance teams for election monitoring have seized ₹34.64 crore in cash so far.

⭐ In Puducherry, police have arrested a masked gang that was hiding with dangerous weapons, intending to commit robbery.

 SPORTS NEWS 

🏀 Chennai Super Kings captain Ruturaj Gaikwad has stated that new players will open the innings for the team.

🏀 In T20 cricket, Amelia Kerr has joined the list of captains who have scored two or more centuries, alongside Rohit Sharma, Sophie Devine, and Meg Lanning.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive