Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Maths - Unit 5 - Important Questions

10th Standard - 2nd Revision Test 2026 - Time Table - Theni District

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2026

 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின்



 






திருக்குறள்: 

குறள் 291: 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.         
விளக்க உரை: 

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :

Today's effort is tomorrow's success.  

இன்றைய முயற்சியே  நாளைய வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உங்களை சிறப்பாக செயல்பட வைக்கவே பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாக வருகிறது.

     டியூக் எலிங்டன்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட மலர் இனம் எது?

ரஃப்லேசியா அர்னால்டி 

            Rafflesia  arnoldii

02.இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு கடல் பாலம் எது?

புதிய பாம்பன் பாலம் -

ராமேஸ்வரம், தமிழ்நாடு 

New Pamban Bridge -Rameshwaram Tamil Nadu.

English words :

shriveled-shrinked due to age

 fatigue-weariness

தமிழ் இலக்கணம்: 

 இன்று செய்வதற்கான வினை மரபுச் சொற்களை பார்ப்போம்
1. மாறன் சிலை செய்தான் – தவறு
    மாறன் சிலை வடித்தான்
2.குமரன் பானை செய்தார் –தவறு
குமரன் பானை வனைந்தான் 
3.வீரன் போர் செய்தான் –வீரன் போர் புரிந்தான்
4.மற்றவர்களுக்கு தீங்கு செய்யாதே – தவறு 
மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதே

அறிவியல் களஞ்சியம் :

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்


ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :

எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது 

இன்றைய செய்திகள்

20.01.2026


⭐குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார். குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

⭐தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

⭐ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு. மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐Regarding Republic Day Celebrations - 1 lakh policemen on security duty across Tamilnadu. The respective state governments are making arrangements for the Republic Day celebrations.

⭐Time is extended  to add names to voter list in Tamilnadu.  As of yesterday, 13.03 lakh people have applied to include their names. The final voter list will be published on February 17, Officers of Election  Commission of India  said.

⭐ 21 killed in Spain high-speed train collision. Train carrying 300 passengers derails between Malaga and Madrid.

 *SPORTS NEWS* 

🏀T20 series against Pakistan: Australia team announced under Marsh. Pakistan and Australia teams will compete in a 3-match T20 series. The T20 World Cup is scheduled to be held next month.

Covai women ICT_போதிமரம்

9th Maths - Revision Important Questions

12th Maths - Unit 7 - Important Questions

11th Subject Wise Important questions

12th - Subject Wise Important Questions

10th - Subject Wise Important Question Analysis

9th Std Tamil - Sivagasindamani - Power Point

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive