Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

hindutamil-prod%2F2026-01-20%2Fs6fjq3my%2F6 
அரசுடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் முடிவு எட்​டப்​ப​டாத நிலை​யில், இன்று முதல் வேலைநிறுத்​தம் மற்​றும் தொடர் மறியலில் ஈடு​படப் போவ​தாக, தமிழக சத்துணவு ஊழியர் சங்​கம் அறி​வித்​துள்​ளது.
 

உறு​தி​யளிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​தை, தமிழக அரசு ஜன.3-ம் தேதி அறி​வித்​தது. இதில், சத்துணவு ஊழியர்​கள் இடம் பெற​வில்​லை. இதற்​கிடை​யில், சத்துணவு ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம், பணிக்​கொடை ரூ.5 லட்​ச​மாக உயர்த்​தப்​படும், குடும்ப ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​படும் போன்ற தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற வலி​யுறுத்​தி, ஜன.20 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தம் நடை​பெறும் என்று தமிழ்​நாடு சத்துணவு ஊழியர்​கள் சங்​கம் அறி​வித்​தது.

இந்​நிலை​யில், சத்துணவு ஊழியர் சங்​கம் மற்​றும் போராட்​டம் அறிவிக்​காத சங்​கங்​களை தலை​மைச் செயல​கத்​தில் அழைத்​து, சமூக நலத்​துறை செய​லா​ளர் ஜெய முரளிதரன், இயக்​குநர் சங்​கீ​தா, இணை இயக்​குநர் ஜெயலட்​சுமி ஆகியோர் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர். கோரிக்​கைகளை நிறைவேற்ற அதி​காரி​கள் கால அவகாசம் கோரினர்.

இதை ஏற்க சத்துணவு ஊழியர் சங்​கம் மறுத்​து​விட்​டது. பின்​னர், தமிழ்​நாடு சத்துணவு ஊழியர்​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் ஜெசி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இன்று (20-ம் தேதி) முதல் திட்​ட​மிட்​டபடி வேலை நிறுத்​தம் தொடங்​கும். 23-ம் தேதி வரை 4 நாட்​கள் மாவட்​டத் தலைநகரங்​களில் தொடர் மறியலும், 24, 25 தேதி​களில் ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் முன்பு காத்​திருப்பு போராட்​ட​மும் நடை​பெறும்” என்றார்.

தமிழக சத்துணவு பணி​யாளர் நலச்​சங்​கத்​தினர் கூறும்போது, “ஒரு சங்​கம் மட்​டும் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளனர். எங்​களுக்​கும், அவர்​கள் போராட்​டத்​துக்​கும் தொடர்பு இல்​லை. 15 சங்​கங்​களில் 14 சங்​கங்​கள் நாளை (இன்​று) போராட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை” என்​றனர்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive