குறள் 292
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
விளக்க உரை:
குற்றமற்ற நன்மையைக் கொடுக்கவல்லதாக இருக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று சொல்லப்படும் இடத்தைப் பெற்றுவிடும்".
பழமொழி :
Dream big,Start small.
பெரிதாக கனவு காணு, சிறியதாக தொடங்கு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பர் இல்லை - எர்னெஸ்ட் ஹெமிங்வே
பொது அறிவு :
01.நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -Albert Einstein
02. தமிழ்நாட்டின் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
காஞ்சிபுரம்-Kanchipuram
English words :
prankster-joker
expedition-mission
தமிழ் இலக்கணம்:
இன்று எடு என்பதற்கான வினை முற்றுச் சொற்களைப் பார்ப்போம்.
1. சிறிது நேரம் ஓய்வு எடு –தவறு
சிறிது நேரம் இளைப்பாறு
2. ஆசிரியர் பாடம் எடுத்தார் –தவறு
ஆசிரியர் பாடம் கற்பித்தார்
3. உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் –தவறு
உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்
4. முடிந்த வரை முயற்சி எடுக்க வேண்டும் –தவறு
முடிந்த வரை முயற்சி மேற்கொள்ள வேண்டும்
இனி சரியான வினை மரபுச் சொற்களை பயன்படுத்துவீர்கள் தானே மாணவர்களே.
அறிவியல் களஞ்சியம் :
பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. இந்த பொருள்களை உருவாக்கும் துகள்கள் ஆனது வழக்கமான விண்வெளி விடயங்கள் அல்லது ஒளியுடன் தொடர்பு கொள்ளாது என்பதால், அவைகள் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஜனவரி 21
- 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
நீதிக்கதை
கழுதையின் தந்திரம்
வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.
வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.
நீதி :
தெரிந்தே தவறு செய்யக் கூடாது
இன்றைய செய்திகள்
21.01.2026
⭐தமிழ்நாடு முழுவதும் நோய் தடுப்பு துறை மூலம் "தொழுநோயை தடுப்பது" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
⭐தமிழகத்தில் 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
⭐மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
Today's Headlines
⭐The Tamil Nadu government has launched an awareness campaign on "Prevention of Leprosy" through the Department of Disease Prevention across Tamil Nadu.
⭐The Chief Minister of Tamil Nadu has predicted that work is underway to construct 121 check dams and 63 embankments in Tamil Nadu.
⭐The Tamil Nadu government's public health department has advised against eating fruits bitten by birds and animals due to the increasing spread of the Nipah virus in West Bengal.
SPORTS NEWS
🏀The first leg of the 4th Women's Premier League (WPL) T20 cricket tournament, featuring 5 teams, was held in Mumbai. And first, Bengaluru scored 178 runs for the loss of 6 wickets. The Gujarat team scored only 117 runs for the loss of 8 wickets in 20 overs and lost.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...