Good things take time.
நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)
பொது அறிவு :
01.இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?
சேவைத் துறை -Tertiary Sector
2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?
இங்கிலாந்து- England
English words :
swoop-dive
bifurcated-split
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.
ஜனவரி 19
நீதிக்கதை
கரடியும் இரண்டு நண்பர்களும்
ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான்.
காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான்.
சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான்.
அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.
கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான்.
நீதி :
ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...