அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி
ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக
மாணவர்களை தேடி அலைகின்றனர்.
Text Books / Guides / Study Materials Download
குழந்தை தொழிலாளர் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பல்வேறு மாணவர்களின் சாதனைகளுக்கு
மத்தியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் படைத்துள்ள
சாதனையும், முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்மாணவர்கள், மூவர் முறையே,
480, 475, 473 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சமஸ்கிருதத்தில் முதலிடம்: 499 மதிப்பெண் பெற்ற மாணவி ரக்ஷனா
மாநில அளவில் சமஸ்கிருதம் மொழி பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி
ரக்ஷனா, "இருதய சிறப்பு மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என
தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி பாடம் எடுக்காததால், 500க்கு, 499
மதிப்பெண்கள் பெற்றும் மாநில அளவில் முதலிடம் பெறமுடியவில்லை.
இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா? அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
சுயநிதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம்
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கல்லூரி ஆசிரியரான காவலர்
"சல்யூட்" அடித்து 20 ஆண்டுகள்
பழக்கப்பட்டு போன கைகள், இனி இரு கைகளையும் கூப்பி "வணக்கம்" வைக்க
போகிறது. ரோந்து சென்ற பூட்ஸ் கால்கள், இனி கரும்பலகை மேடையில் அங்கும்,
இங்குமாய் நடை போட போகிறது.
வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
"வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்புக்
கிடைக்கும் போது அதை மாணவர்கள்பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறினார்.
PG - New Appointment Joining Date - 10.06.2013
தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் ஆணை 03.06.2013 என்பதற்கு பதிலாக 10.06.2013 அன்று பணியில் சேர அறிவுரை வழங்கி உத்தரவு
5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை
தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி
2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின்
ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013
மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Proceedings
SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்
SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்
Click Here 4 Download Instructions
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
காலை வெளியிடப்பட்டது.
இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 497
மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496
மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள்
வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதமடித்தவர்கள்: கணிதம்:29,905
சமூக அறிவியல்:19,680
பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்
இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு
முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள்
அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய
தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள்
வெளியிடப்படுகின்றன.
ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை.
செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15
மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை
பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.
சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது;–
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள
சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி
இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில
பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
பொது மாறுதல் கலந்தாய்வு - ADW
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது
பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013
அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான
பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி
விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது
01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்
2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி /ஆசிரியர் பயிற்றுநர் /இடைநிலை
ஆசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013
முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட
பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை
ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை
பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று
திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள
அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்
தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும்
பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்
சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013
சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்,
சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே
முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எந்த சி.பி.எஸ்.சி., மண்டலம் எந்த இடத்தில்?
இந்தியாவில் மொத்தம் 8 சி.பி.எஸ்.இ., வாரியங்கள் உள்ளன. ராஜஸ்தான்
மாநிலத்திலுள்ள ஆஜ்மீர், ஹரியானா மாநிலத்திலுள்ள பஞ்ச்குலா, டெல்லி, அசாம்
மாநிலத்தின் குவஹாத்தி, சென்னை, உத்திரபிரதேசத்தின் அலகாபாத், ஒடிசாவின்
புபனேஷ்வர் மற்றும் பீகாரின் பாட்னா ஆகியவையே அந்த மண்டலங்கள்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில்,
அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்
"மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து
தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட
தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள பி.பி.ஓ., துறையானது பேச்சு
மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கி
வருகிறது. திறமைமிக்க தகவல் தொடர்பாளர்கள் இளம் பி.பி.ஓ., துறையினரோடு,
திறமையை பகிர்ந்து கொண்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
அருங்காட்சியகங்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு: மத்திய அமைச்சர் ஆலோசனை
"கற்றுக் கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் கவலைகளை
மறந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும் இடமாகவும், அருங்காட்சியகங்கள் இருக்க
வேண்டும்," என, மத்திய கலாச்சார அமைச்சர் சந்தரேஷ் குமாரி கடோச்
தெரிவித்தார்.
பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்
உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற
ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே.
ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈக ஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை
தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும்
தெரியாது.
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 17ல் துவக்கம்
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 17ம் தேதி துவங்க உள்ளது.
அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் 2013-14 ம் கல்வி
ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது. இப்பள்ளியில்
குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின்
ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு பதிவுக்கு காரைக்காலில் சிறப்பு ஏற்பாடு
காரைக்காலில் பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத் ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் கடன் உதவி
ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் ரூ.870 கோடி கடனாக வழங்க உள்ளது.
இந்த கடன், ஐ.ஐ.டி.,யின் வளர்ச்சிக்காக ஜப்பானிடம்
இருந்து பெறப்பட்ட அதிகப்படியான கடன் தொகையாகும். இதனால் மாநிலத்தில்
கல்வியை மேம்படுத்த இத்தொகை உதவிகரமாக இருக்கும் என்று வல்லுனர்கள்
தெரிவிக்கின்றனர்.
வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
அரியலூர் மாவட்டத்தில் 1,06,409 ஹெக்டேர்
சாகுபடி பரப்பளவாக உள்ளது. இதில், 67 ஆயிரத்து, 155 ஹெக்டேர் மானாவரி பயிர்
சாகுபடி பரப்பளவாகவும், 39 ஆயிரத்து, 254 ஹெக்டேர் இறவை சாகுபடி
பரப்பளவாகவும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சி.பி.எஸ்.இ.,10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் காணலாம்.
ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது
ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சர்தேச தமிழ்
ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்ம ஸ்ரீ
விருது வழங்கி கவுரவித்தார்.
காதுகேளாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்? ஆய்வில் தகவல்
தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு
உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய
வந்துள்ளது.
செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க உத்தரவு
இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத உள்ளோர், செய்முறை
பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ள, அரசு தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக
மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு
வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவ சீட்டுக்கு ரூ.30 லட்சம்: மோசடி செய்த இருவர் கைது
மருத்துவப் படிப்பிற்கு, சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய்
பெற்று, மோசடி செய்த இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்
நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது.
தேவைதானா ஆசிரியர் தகுதித் தேர்வு? - முனைவர் மணி.கணேசன்
மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால
கிருஷ்ண கோகலே 1910-ஆம் ஆண்டிலேயே இலவச கட்டாயக் கல்விக்காகக் கொடுத்த
குரல் பல்வேறு படிநிலைகளைக் கடந்து அண்மையில்தான் மத்திய அரசால் இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என ஜம்மு-காஷ்மீர் தவிர நாடு முழுவதும்
ஏப்ரல்1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்றுள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில்... ஜூன் 10ம் தேதி தான் பள்ளிகள் திறப்பு : தமிழக கல்வித் துறை அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.










