NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்

             கோயம்பேட்டில் இருந்து செனாய்நகர் வரை சுரங்க பாதையில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில். 
 
சென்னை மாநகர் முழுவதும் மெட்ரோ ரயில்
போக்குவரத்து சேவை வரும் 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து, பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராஜிவ் நாராயண் திவேதி தெரிவித்தார்.
track சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சோதனை முறையில் இயக்கப்பட்டது.
அப்போது நாராயண் திரிவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு -செனாய் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை சுரங்கப்பாதையில் வரும் ஜனவரியில் தொடங்கும். அதன் பின்பு செனாய் நகரில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை விரிவடையும். பின்னர், நேரு பூங்கா முதல் எழும்பூர் வரை சுரங்கப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும். அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை முதல் சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் முதல் - விமான நிலையம் என 52 கிலோ மீட்டருக்கான முழுமையான மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை, 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்.
அப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு பயணி ரூ.70 கட்டணமாக செலுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்றார் ராஜிவ் நாராயண் திவேதி.
சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதைகளில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயில்கள்: வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.
இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என 9 ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ராட்சத மின் விசிறிகள்: சுரங்க ரயில் நிலையங்களுக்கு தலா 4 ராட்சத மின்விசிறிகள் மூலம் காற்றோட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த ராட்சத மின்விசிறிகள், வெளியே இருந்து உள்ளே காற்றை இழுத்து உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுகின்றன.
கண்ணாடி அறைக்குள் ரயில்: சுரங்க ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் வந்து நிற்கும்போது கண்ணாடி அறைக்குள்ளே வருவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் யாரும் அத்துமீறி சுரங்க தண்டவாளத்தில் நுழைந்து விடாமல் தடுக்கப்படும். சுரங்க ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிற்கும்போது ரயிலின் கதவு திறக்கும் அதேநேரத்தில் கண்ணாடி கதவுகளும் திறக்கும். ரயிலின் கதவுகள் மூடிய பின்பு கண்ணாடி கதவுகளும் மூடிக்கொள்ளும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
பாதுகாப்பு வழி

மெட்ரோ ரயில் சுரங்கத்தில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் பாதுகாப்பு நுழைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய சுரங்கத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி சுரங்கத்தில் இருக்கும் பாதுகாப்பு நுழைவில் சென்று வெளியே செல்லும் வகையில் இந்த வழி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நுழைவு அருகில் இருக்கும் அடுத்த மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive