எம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு

          சென்னை;அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று நடக்கிறது.
 
          தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்பில், 94 இடங்கள் உள்ளன.
இதற்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடந்தது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் இன்று நடக்கிறது.'தேர்வு செய்யப்படுவோர், இன்றே சான்றிதழ்களை சமர்பித்து, கல்லுாரியில் சேர்ந்து கொள்ள வேண்டும். விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive