Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி

கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

ஒருங்கிணைக்க முடிவு:
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 15 ஆயிரம் பள்ளிகளை, 'IT@School' என்ற திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் களஞ்சிய இணையதளமான, 'விக்கிபீடியா'வை போல், 'ஸ்கூல் விக்கி' என்ற பெயரில் இணையதளம் ஏற்படுத்தி, அதில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கவும், மாணவர் - ஆசிரியர் இடையே, தகவல் பரிமாற்றத்துக்கு உதவவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும் நவ., 1ல், ஸ்கூல் விக்கி இணையதளம் தயாராகிவிடும். இதில், 15 ஆயிரம் பள்ளிகளில், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மலையாளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளி விபரங்கள், பின்னணி குறித்து மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பதிவேற்ற முடியும்.
சிற்றிதழ்:
பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive