NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 18 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி உட்பட 18 நகரங்களுக்கு இரண்டாண்டுகளுக்குள் ‘மாஸ்டர் பிளான்’ என்ற முழுமை திட்டம் தயாரிக்கும் பணியை நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. தொடங்கியுள்ளது.



நாடு முழுவதும் 500 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ‘அம்ரூத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நகரின் புவியியல் சூழல் முழுமையாக ஆராயப்பட்டு, அங்கு மக்களின் குடியேற்றம், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், எதிர்கால தேவைகள் குறித்து முழுமையாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே அம்ரூத் நிதி கிடைக்கும். தமிழகத்தில் முழுமை திட்டம் இல்லாத 18 நகரங்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து டி.டி.சி.பி அதிகாரிகள் முழுமை திட்ட தயாரிப்பு பணியைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, டி.டி.சி.பி. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “தமிழகத்தில் 18 நகரங்களுக்கான முழுமை திட்டத்தை இரண்டாண்டுகளுக்குள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்நகரங்களை ஐந்து தனித்தனி தொகுப்புகளாகப் பிரித்து தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. ஜி.ஐ.எஸ். எனப்படும் புவிசார் தகவல் அமைப்பு அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த முழுமை திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

மொத்தம் 6,566 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குத் தயாரிக்கப்படும் இந்த முழுமை திட்டம் 2051 வரை பயன்படுத்தும் வகையில் இருக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் புதிதாக முழுமை திட்டம் தயாரிக்கப்பட உள்ள 18 நகரங்கள்: நாகை, வேளாங்கண்ணி, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், காரைக்குடி, ராஜபாளையம், வேலுார், திருவண்ணாமலை, ஆம்பூர், சேலம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தூத்துக்குடி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive