60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

இனி SBI Bank-ன் செக் புக்குகள் செல்லாது!

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட 7 துணை வங்கிகளின் காசோலைகள் டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் செல்லாது என எஸ்பிஐ அறிவித்துள்லது.
மேலும் புதிய காசோலைகளை வாங்காதவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் காசோலைகளை புதிதாக வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது.

எஸ்பிஐ வங்கியுடன் துணை வங்கிகள் அனைத்து இணைந்துள்ள நிலையில், துணை வங்கிகளின் செக் புக்குகள் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு செப்டம்பர் 30ம் தேதியுடன் காலக்கெடு முடிந்த நிலையில் டிசம்பர் 31 வரை தேதி நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 பாரதிய மகிளா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸேடேட் பாங்க் ஆப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிராவங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கிகளின் பழைய செக்குப் புக்குகள் செல்லாது. புதிய செக் புக் வேண்டும் எனும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம், எஸ்பிஐ வங்கி கிளை, எஸ்பிஐ இணையதள வங்கி சேவை, எஸ்பை செயலி போன்றவற்றைப் பயன்படுத்திக் கோரிக்கை வைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive