60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

ஆன்லைன் பணிச்சேர்ப்பு 16% உயர்வு!

தகவல் தொழில்நுட்பம் தவிர்த்துப் பிற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக ஆன்லைன் வாயிலாக ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை நவம்பர் மாதத்தில் 16 சதவிகிதம் உயர்ந்துள்ளது.



ஆன்லைன் வேலைவாய்ப்புதளமான நவ்கரி.காம், ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாக ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆட்சேர்ப்பு விகிதம் நவம்பர் மாதத்தில் 2,113 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கட்டுமானம், பொறியியல், ஆட்டோமொபைல், தொழில் துறை உற்பத்தி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில காலாண்டுகளிலும் இதேபோன்ற வளர்ச்சி விகிதம் நீடிக்கும் என்று நவ்கரி நிறுவன தலைமை விற்பனைப் பிரிவு அதிகாரியான வி.சுரேஷ் கூறுகிறார்.

துறை வாரியாகப் பார்த்தோமேயானால், நவம்பர் மாதத்தில் பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் 46 சதவிகித வளர்ச்சியும், கனரக எந்திரங்கள் பிரிவில் 30 சதவிகித வளர்ச்சியும், வங்கித் துறையில் 24 சதவிகித வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. நகரங்கள் வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக கொல்கத்தாவில் ஆன்லைன் வாயிலாக ஆள் சேர்க்கும் விகிதம் 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்கள் முறையே 15% மற்றும் 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூருவில் 3 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive