NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதிவிறக்க வேகத்தில் மீண்டும் ஜியோ முதலிடம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் கடந்த அக்டோபர் மாதம் விநாடிக்கு 21.8 மெகாபைட் என்ற அளவில் முதலிடத்தில் இருந்ததாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
4ஜி தொழில்நுட்பத்தில் இணையத்திலிருந்து தகவல்களை வேகமாக பதிவிறக்கம் செய்வதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.9 எம்பிபிஎஸ்-ஆக இருந்த இந்த நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம், சென்ற அக்டோபரில் சற்றே குறைந்து 21.8 எம்பிபிஎஸ் -ஆனது. வோடபோன் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கின் பதிவிறக்க வேகம் 9.9 எம்பிபிஎஸ் ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் ஜியோவின் பதிவிறக்க வேகம் 2 மடங்கைவிட அதிகம் ஆகும்.

மேலும், ஐடியா செல்லுலார் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் முறையே 8.1 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.

அதேசமயம், 'அப்லோடு' எனப்படும் தகவல்களை பதிவேற்ற வேகத்தில் ஐடியா செல்லுலார் நிறுவனம் மிக வேகமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பதிவேற்ற வேகம் 7.1 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. ஐடியாவைத் தொடர்ந்து வோடபோன் 6.2 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், ரிலையன்ஸ் ஜியோ 4.9 எம்பிபிஎஸ் வேகத்தையும், பார்தி ஏர்டெல் 3.9 எம்பிபிஎஸ் வேகத்தையும் கொண்டிருந்தது.

மை-ஸ்பீடு ஆப் மூலம் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இந்த முடிவுகள் தெரியவந்ததாக டிராய் கூறியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive