NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS : JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு!!!

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை இன்று மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டதிற்கு  ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பார்கள் மோசஸ, சுப்ரமணியன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்கள். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்
2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய அனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 2 1 - 12-17 அன்று முறையீடு செய்வது
3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்ற தலைப்பில்  கருத்தரங்கம் திருச்சியில் 31.12 .17. அன்று  ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.
4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான 1. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல்  பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தல் 2)  21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், 6)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல், 7) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்துதல், 8) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தல்,  9) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லை என்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் . மாயவன்,மீனாட்சி சுந்தரம்,முத்துசாமி,அன்பரசு,வெங்கடேசன்,தாமோதரன்,தாஸ், செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive