Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 18.2.2018

மேஷம் குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ரிஷபம் திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு  

மிதுனம் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கடகம் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா  

சிம்மம் சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்


கன்னி உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே 

துலாம் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 

தனுசு எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

மகரம் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கும்பம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை 

மீனம் ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading