NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி

அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்  விபத்தில்லா பயணம் மேற்கொள்வது சவாலாக உள்ளதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொண்டாலே, விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனி மனித விழிப்புணர்வு மட்டுமே சாலை விபத்துக்கு ஒரே தீர்வு என கூறி, பள்ளிக்கு அருகில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார் அரசுப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி மாயாவதி.

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலுள்ள ஏத்தாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி மாயாவதி, தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியை உருவாக்கி, அதனை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவி கூறியதாவது: பள்ளிகளுக்கு அருகாமையில் வேகத்தடைகள் அமைத்திருந்தாலும், வேகமாக வரும் வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலும், விபத்துக்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், இக்கருவியை வடிவமைத்துள்ளேன். இந்த சாதனத்தில் ரேடியோ அலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வானொலி அதிர்வெண் கருவியை முதலில் பள்ளியில் பொருத்தி விட வேண்டும். இந்த அதிர்வெண்ணானது பள்ளியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வேலை செய்யும்.

 இந்த அதிர்வெண்ணை ரிசீவ் செய்யும் ரிசீவரை, வாகனங்களில் பொருத்துவது மிக மிக்கியம். வாகனங்கள் பள்ளிக்கு அருகில் வரும்போது, ரேடியோ ரிசீவரானது வேகத்தை பாதியாக குறைக்கிறது. இதனால், விபத்துக்களை தடுக்கலாம்.  ரேடியோ ரிசீவருடன் சென்சாரை பொருத்தி விட்டால், வேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே மாணவர்களோ அல்லது வேறு ஏதேனும் வந்தால், புற ஊதாக்கதிர் மூலம் இயங்கும் சென்சாரானது வாகனத்தின் வேகத்தை பாதியாக குறைக்கிறது. மேலும், என்ஜினை அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தினால், பள்ளிகள் அருகே பெருமளவில் விபத்தை தடுக்கலாம். பள்ளிகள் மட்டுமன்றி விபத்துக்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும், இந்த கருவியை பயன்படுத்தினால் இழப்புகளை தடுக்கலாம். அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் கொடுத்த ஊக்கத்தாலும், பெற்றோர் இளவரசன், தேவி ஆகியோரின் ஆதரவாலும், இந்த கருவியை உருவாக்கியுள்ளேன். கண்காட்சியில் எனது கண்டுபிடிப்பை கண்டு வியந்து, சேலம் கலெக்டர் பாராட்டியது மகிழ்ச்சியான தருணம்.     இவ்வாறு நிறைவு செய்கிறார் மாயாவதி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive