6140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

காலியாக உள்ள 6,140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (பிப்.28) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழக காவல்துறையில் ஆயுதப் படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்களுக்கும், 46 பின்னடைவு பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.
3.20 லட்சம் பேர் விண்ணப்பம்:  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு கடந்த ஜனவரி 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 10 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். அத்துடன் 19 திருநங்கையரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை மார்ச் 11-ஆம் தேதி நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
80 மதிப்பெண்: எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு: இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பதிவேற்றம் செய்யப்பட்டது.
எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை புதன்கிழமை (பிப்.28) முதல் பதிவிறக்கம் செய்து பெறலாம். நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே மார்ச் 11-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive