பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்கள், தேர்வுக்கு பின்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் சித்தா போன்ற படிப்புகளில் சேர,
நீட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான,
நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வில், தமிழகத்தில் இருந்து,
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.நீட்
தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், அதிகம்
தேர்ச்சி பெற, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இலவச
பயிற்சி பெறும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முறையாக விண்ணப்பிக்க, உதவ
வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு
பள்ளிகளில், நீட் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்,
உதவி மையம் அமைத்து, உதவ வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை
தெரிவித்துள்ளனர்.
Annual Exam 2026
Home »
» 'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...