NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்

சென்னை, சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500 இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.சென்னை பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கல்வி கவுன்சில் கூட்டம், துணை வேந்தர், துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில், நேற்று நடந்தது.

மறுசீரமைப்பு
இதில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான விதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் கல்வி ஆண்டில், சென்னை பல்கலையில், பி.எட்., கல்வியியல் படிப்பு அறிமுகப்படுத்தவும், கல்விக்குழு ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து, துணை வேந்தர், துரைசாமி கூறியதாவது.பல்கலையால் நடத்தப்படும், 58 வகை முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு, பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
அனைத்து முதுநிலை படிப்பிலும், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும், 'சி.பி.சி.எஸ்., கிரெடிட்' மதிப்பெண் முறை செயல்படுத்தப்படும்.
தமிழ் துறையில், தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம்; தமிழ் இலக்கிய படிப்புகள் என, இரண்டு பிரிவுகளாகவும், இயற்பியலில், அணு இயற்பியல் மற்றும் கருத்தியல் இயற்பியல் என, இரண்டு பாடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின், பல்கலை மானியக் குழு அனுமதியுடன், பட்டம், சான்றிதழ் மற்றும், 'டிப்ளமா' படிப்புகள், 'ஆன்லைனில்' நடத்தப்படும். 
'மூக்' என்ற ஆன்லைன் படிப்புகள், 'ஸ்வயம்' இணையதளம் வழியாக, சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் அறிமுகம் செய்யப்படும். ஆன்லைன் படிப்புக்கான சிறப்பு மையம், சென்னை பல்கலையில் அமைக்கப்படும்.
மூன்று வழி
அனைத்து முதுநிலை படிப்புகளும், மூன்று வழிகளில் நடத்தப்பட உள்ளன. நேரடியாக பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியிலும், ஆன்லைன் முறையிலும், அறிமுகம் செய்யப்படும். இதனால், ஏதாவது ஒரு பாடத்தை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும், மாணவர்கள் படிக்கலாம்.
இதுகுறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தொலைநிலை கல்வி மாணவர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.வரும் கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பி.எட்., படிப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி பெறப்பட்டு
உள்ளது. முதல் ஆண்டில், 500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பாடத்திட்டத்தில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஎச்.டி.,க்கு கடும் கட்டுப்பாடு
துணை வேந்தர் துரைசாமி மேலும் கூறியதாவது:பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளில், போலி கட்டுரைகள், முறைகேடுகளை தவிர்க்க, பல்கலைக்கழக மானிய குழுவின், 2016ம் ஆண்டு விதிகள், அனைத்து பல்கலைகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. யு.ஜி.சி., விதியை பின்பற்றாத, பிஎச்.டி., படிப்புகளை, பெரும்பாலான நிறுவனங்கள், பணிக்காகவோ, ஆசிரியர் பயிற்சிக்காகவோ ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், யு.ஜி.சி., 2016ம் ஆண்டு விதி 
கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.இதில், மாணவர்கள் கேட்டுக் கொண்டால், பட்டம் வழங்கும் போது, 'யு.ஜி.சி., விதி, 2016ன்படி வழங்கப்பட்ட சான்றிதழ்' என, குறிப்பிடப்படும். பிஎச்.டி., படிப்பில் சேர்வோர், சென்னை பல்கலையில் கட்டாயமாக, 'ஆன்லைன்' பதிவு செய்ய வேண்டும்; ஆண்டுக்கு ஒரு முறை, புதுப்பிக்க வேண்டும். பல்கலையின் முனைவர் குழு ஒப்புதல் அளிக்கும் தேர்வர்களிடம் மட்டுமே, கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும் என, புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். மாணவர்களுக்கு சலுகை
சென்னை பல்கலை இணைப்பில் உள்ள, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், போதிய அளவுக்கு கல்லுாரிக்கு வராமல், 50 சதவீதத்துக்கு குறைவான வருகைப்பதிவு இருந்தால், அவர்கள், அந்த பருவத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த மாணவர்கள், தங்களின் இறுதியாண்டு படிப்பு முடிந்த பின், தவறவிட்ட பருவ தேர்வை எழுத வேண்டும்.
இதற்காக, சென்னை பல்கலை புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு, சென்னை பல்கலையின், கல்வி கவுன்சிலில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, 5 சதவீதம் கூடுதல் இடங்கள் வழங்கப்படும். அந்த இடங்களை, தேர்வை தவறவிட்ட மாணவர்களின் சேர்க்கைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு சேரும் மாணவர்களில், இளநிலை பட்டம் பெறுவோர், 10 ஆயிரம் ரூபாயும்; முதுநிலை பட்டம் பெறுவோர், 20 ஆயிரம் ரூபாயும், கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். எனவே, வரும் கல்வி ஆண்டு முதல், தேர்வை தவறவிட்ட மாணவர்கள், தங்கள் படிப்பை முடிக்க, கல்லுாரிகள் அனுமதிக்க வேண்டும் என, பல்கலை உத்தரவிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive