Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 23.2.2018

மேஷம் மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.
பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ரிஷபம் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துச் செல்லும். மாலை 4.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவை. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மிதுனம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்  

மிதுனம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 

சிம்மம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்  

கன்னி மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை 

துலாம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாலை 4.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவை. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை  

விருச்சிகம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள் 

தனுசு குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுக் கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை  

மகரம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் 

கும்பம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சேமிக்க வேண்மென்ற எண்ணம் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்  

மீனம் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading