Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் முதல் தாள் மிக எளிது: மாணவர்கள் மிகழ்ச்சி


       பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என, மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், அரையாண்டு தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29 மதிப்பெண்களுக்கான 8 கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண் மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

        பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. முதல் தேர்வாக தமிழ் முதல் தாளில் இடம் பெற்ற வினாக்கள், பெரும்பாலும் கடந்தாண்டில் கேட்கப்பட்டவையாக இருந்தன. இலக்கணம், மனப்பாடப் பகுதிகள் எளிமையாக இருந்ததால், சாதாரணமாக படிக்கும் மாணவர்கள்கூட 70 மதிப்பெண்களை எட்டிவிட முடியும்.

         மாணவர்கள் குஷி: பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29 மார்க்கிற்கான எட்டு கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண் மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 இரண்டு தேர்வுகளிலும் வரிசை எண் மாறாமல் கேட்கப்பட்ட கேள்விகள்:
எண் 1: நாடோறும் எதனைப்பாடுதல் வேண்டும், என நாமக்கல் கவிஞர் கூறுகிறார் (2 மார்க்).
எண் 7: வரத நஞ்சப்பபிள்ளை எக்காரணங்களால் தமிழன்னையை வாழ்த்துவம் என கூறுகின்றார்(4 மார்க்) . எண் 12: ராஜராஜ சோழனின் வில், வாள், முரசு, கொடி குறித்து கூறப்பட்டன யாவை(4 மார்க்).
எண் 19: குழந்தைத்தொழிலாளர் அவலநிலையைக் கவிஞர் அப்துல் ரகுமான் கூறுமாறு தொகுத்து வரைக(8 மார்க்).
எண் 27: பொருண் மொழி காஞ்சித்துறை(4 மார்க்). எண் 28: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து- குறட்பா அணியை விளக்குக(4 மார்க்),
எண் 48: சுந்தரர் தேவாரம்(மூன்றில் சரியானதை தேர்வு செய்வது, ஒரு மார்க்), எண் 50: கோடிட்ட இடங்களை நிரப்பும் கேள்வியில் எந்நன்றி..... உய்வுண்டாம் உய்வில்லை; செய்ந்நன்றி மகற்கு(2 மார்க்).




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive