Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 ஆம் வகுப்பு: ஆங்கிலம் முதல் தாள் மாணவர்கள் எப்படி எழுதினர்?

             புதிய சிந்தனை இல்லை, அலங்கரிப்பு தான் என்கிறார் வேலூர் ஆசிரியை திருமதி. விஜயலட்சுமி ராஜா

           ஆங்கிலம் முதல் தாள் எப்படியிருக்குமோ என்ற பதைப்பு .ஆனால் எளிமையாகவே இருந்தது.மாறாக மேற்பார்வை பணி தான் அலுப்பாக இருந்தது .தனியார் பள்ளி மாணவர்கள்!
 
             அனைவரும் ஒன்று போலவே எழுதினர் .ஒரு வெரைட்டி வேணாம்?போங்கப்பா !எல்லோரும் ஒரே மாதிரி கட்டம் போடுவதும் வட்டம் போடுவதும் மேகம் வரைந்து மழை பொழிய வைப்பதும், paragraph question க்கு ஒரே மாதிரி thought சொல்லி முடிப்பதும் ,ஷப்பா !முடியல!விரைவிலே சலித்து போய்விட்டது.
   
                  அதிலும் 12 வது கேள்விக்கு சொந்தமாக construct செய்யாமல் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ,மாதிரியென்ன மாதிரி ,சொல்லியே வைத்திருக்கின்றனர் ,படிக்கும் பிள்ளை, படிக்காத பிள்ளை ,சுமாராக படிக்கும் பிள்ளை என்று எல்லோருமே ஒரே பதிலையே எழுதினர் ,"I know the word popular"அல்லது "I know the meaning of the word popular".அட உனக்கு தான் meaning தெரியுமே அந்த வார்த்தையை பயன்படுத்தி ஒரு sentence எழுதினால் என்ன என்று கேட்கலாம் போல தோன்றியது !நமக்கு எதற்கு வம்பு என்றே எல்லோரும் ஒரே பதிலைஎழுதினர் என்று நினைக்கிறேன் ..ஒரே ஒரு பெண் மட்டும் Sachin is a popular cricket man என்று எழுதினாள் .அவளுக்கும் cricket man எழுதக்கூடாது cricketer அல்லது கிரிக்கெட் player என்று எழுதவேண்டும் என்று தோன்றவில்லை .memory poem க்கு கூட ஒரு பதாகை வரைந்து அதில் poem எழுதினர் .எப்படி எழுதினாலும் பதில் இருந்தால் முழு மதிப்பெண் கிடைக்கும் வினாக்களுக்கும் கூட பிள்ளைகளை இப்படி வாட்டி வதைப்பது ஏனோ?இரண்டரை மணி நேரமும் பேப்பர் பேனாவுடன் போராடிக்கொண்டிருந்தனர் மாணவர்கள் .அவர்களது ஒரே குறிக்கோள் அலங்கரிப்பதிலேயே இருந்தது .
 
                  பொங்கலுக்கு செம்மண் இடுவதை போல கிடைக்கும் இடங்களிலெல்லாம் அலங்கரித்து கொண்டிருந்தனர் அவர்கள் .ஒரு வழியாக warning bell அடிக்கும் போது வியர்க்க விறுவிறுக்க நிமிர்ந்தனர் .அதே ஹாலில் 7பெண்கள் பிள்ளைகள் தேவைக்கு மட்டும் விடைத்தாளை அலங்கரித்து 30 நிமிடங்கள் முன்னதாகவே எழுதி முடித்து அமர்ந்திருந்தனர் . ஆண் பிள்ளைகள் வேறு ஒரு பள்ளியிலிருந்து வந்திருந்தனர்.இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் பாடத்தை விட அலங்காரத்தை அதிகம் கற்பித்து அனுப்பியிருக்கிறார் என்று தோன்றியது .தேர்வு வைப்பதன் நோக்கத்தையே சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்றும் ஒரு வித பயம் ஏற்பட்டது .தேர்ச்சி பெற சிரமப்படும் மாணவர்களுக்காக என்று கூறப்பட்ட குறுக்கு வழிகளையே பெரும்பாலும்நன்றாக படிக்க கூடிய மாணவர்களும் பயன்படுத்துவது மிகவும் வருத்தப்பட கூடிய செயல் .இது போன்ற குறுக்கு வழி பயிற்சிகள் மாணவர்களின் இயல்பான கற்பனை திறனையும் படைப்பாற்றல் திறனையும் நிச்சயமாக மழுங்கடித்து விடும் .இந்நிலை தொடர்ந்தால் எல்லாவற்றிற்கும் ஒரு ready made product ஐ இளைய சமுதாயத்தினர் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிடக்கூடும் !




2 Comments:

  1. accepted thought but how far the students able to write the answer as you think....????????

    ReplyDelete
  2. yes you r right ... what can we teachers do ???? .. these exams are to express their understanding but the students are showing only their memory power .
    these things can't be changed unless the educating system changes .....
    To make these things worst, some teachers even allow them to copy from others....what can we do ????
    what i think is that 'the govt. should provide books without any questions in that(book back)..it should contain only texts or lessons.. they should not give any blueprint also ... the students should not know how the question will be ... the govt. should not also let out the question paper ... they should give it and get it back in the hall itself... the students should express only those what they understood .. the questions should also be like that ...'

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive