அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக
தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை
இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone
அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில்
விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை
தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய போனை
ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்.
அதற்கு உறைகள் (Phone cover) ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிவிடுங்கள்.
பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணியைக் (cotton cloth) கொண்டு உங்கள் Smartphone -ஐநன்றாக துடைக்கவும்.
தண்ணீரை போக்க உங்களுடைய ஸமார்ட் போனை உதற வேண்டாம். அவ்வாறு போனை
உதறுவதாலோ, அல்லது குலுக்குவதாலோ போனில் உள்ளிருக்கும் பகுதிகளுக்கு
தண்ணீரானது பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.
காது துடைப்பான் கொண்டு ஆடியோ ஜாக்கில் (Audio Jack port) உள்ள நீரை
அகற்றுங்கள். அல்லது ஒரு துணியை நன்றாக கூர்மையாக முறுக்கி அந்த துளைகளில்
விட்டு ஈரத்தை வெளியேற்றுங்கள். மேலும் ஐபோனின் ஹோம் பட்டன், வால்யூம்
பட்டன், மியூட் பட்டன், ஸ்பீக்கர், மைக்ரோ போன் உள்ளிட்ட பகுதிகளை நன்றாக
துடைத்து ஈரத்தை முடிந்தவரை துடைத்து எடுத்துவிடுங்கள்.
இவையெல்லாம் உங்கள் ஐபோனிற்கு நீங்கள் செய்யும் முதலுதவி மட்டுமே.
பிறகு அருகே இருக்கும் உங்கள் ஐபோன் மாடல் சர்வீஸ் சென்டரில் கொடுத்து அதை
சரிசெய்ய முற்படுவதே மிகச் சிறந்த வழிமுறை. ஐபோன் தண்ணீரில் விழுவதால்
ஏற்படும் பாதிப்புகள்:
iPhone Sensor பாதிக்கப்படும். சென்சார் பாதிக்கப்பட்டதை ஐபோனில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை வைத்து உறுதிப்படுத்தலாம்.
home button வேலை செய்யாமல் போகலாம். அதற்கு Onscreen Home Button என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
ஆடியோ அவுட்புட் (Audio Out Put) வேலை செய்யாது. அதாவது ஐபோனிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகலாம்.
ஐபோனில் இருக்கும் மற்ற முக்கிய பட்டன்கள் அதாவது ஹோம் பட்டன், மியூட் பட்டன், பவர் பட்டif ஆகியவை இயங்காமல் இருக்கும்.
இவற்றில் பவர் பட்டனுக்கு மட்டுமே மாற்றீடாக (Alternative Application)
எந்த ஒரு அப்ளிகேஷனும் இல்லை. மற்ற பட்டன்கள் வேலை செய்ய ஆல்டர் நேட்
அப்ளிகேஷன் உண்டு.
தொடுதிரை (Touch Screen)இயக்கமற்று செயலிழந்து போக வாய்ப்பு உண்டு. அதற்கு
புதியதாக Touch Screen மாற்றி அமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர
முடியும்.
வாட்டர் புரூப் உறைகளைப் (Water Proof Smartphone cases) பயன்படுத்தலாம்.
அது கூடிய வரையில் உங்களுடைய விலையுயர்ந்த சாதனங்களில் தண்ணீர் உள்ளே
புகாமல் பாதுகாக்கும்.
இறுதியாக இந்த வழிமுறையைப் பின்பற்றினால் மேற்கண்ட அனைத்துப்
பிரச்னைகளையும் நிச்சயமாக எளிதாக கையாள முடியும். என்ன வழிமுறை
என்கிறீர்களா?. கவனமாக இருப்பது ஒன்று உங்கள் ஆண்ட்ராய்ட் போன் முதல் ஐபோன்
வரை அனைத்து விலையுயர்ந்த சாதனைகளையும் பாதுகாப்பாக வைத்திட உதவும் (Only
careful is the best way to protect Android, iPhone).
அதாவது குறிப்பிட்ட அச்சாதனங்களை எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டுமோ,
எந்தெந்த நேரங்களில் பயன்படுத்த வேண்டும் அந்தந்த இடங்களில், அந்தந்த
நேரங்களில் பயன்படுத்தினால் போதும்.மற்ற அசௌகரியமான இடங்களில் (unnecessary
place) பயன்படுத்துவதை தவிர்த்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல்,
விலையுயர்ந்த உங்கள் தொலைத்தொடர்பு சாதaனங்களை பாதுக்காத்திட முடியும்.
Thank you.........
ReplyDeleteUseful msg
ReplyDeletevery usefull idea
ReplyDeleteபாராட்டவேண்டிய செய்தி மட்டுமல்ல, பயனுள்ள செய்தியும்கூட. இவைகளை தெரிவிக்க பாடசாலையால் மட்டுமே முடியும். நன்றி அன்பு நெஞ்சங்களே.
ReplyDeleteதகவலுக்கு நன்றி தோழர்
ReplyDeleteகல்வி செய்தியோடு நற்செய்தியும் பாடசாலையில் மட்டுமே