Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்.


              கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. முடித்துவிட்டு வெளியே வரும் மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பில் சேருவதற்கு முயல்வார்கள். அரசுக் கல்லூரிகளில் சேர விரும்பினாலும் அதற்கு எப்போது விண்ணப்பம் கொடுப்பார்கள்?
 
           கவுன்சிலிங் எப்போது நடத்துவார்கள்? விண்ணப்பித்தால் இடம் கிடைக்குமா? என மனத்தில் ஆயிரம் சந்தேகங்கள் தோன்றும். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பி.எஸ்சி. பி.எட். என்ற ஒருங்கிணைந்த படிப்பை வழங்குகிறது மத்திய அரசின் மண்டலக் கல்வியியல் நிறுவனம்.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் மைசூர், போபால், புவனேஸ்வரம் உள்பட 5 இடங்களில் உள்ளது. மைசூர் மண்டலக் கல்வியியல் நிறுவனம். பிளஸ்-2 முடித்துவிட்டுக் கணிதம், அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியராக விரும்பும் மாணவர்களுக்கு ஏற்றது இந்த 4 ஆண்டுகால பி.எஸ்சி. பி.எட். படிப்பு.பிளஸ்-2 முடித்ததும் ஒரே நேரத்தில் பி.எஸ்சி. பி.எட். முடித்துவிடலாம்.பிளஸ்-2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், பாடங்கள் படித்திருந்தால் போதும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அவசியம், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு.

           நுழைவுத்தேர்வு மதிப்பெண், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில், ஆசிரியர் பணி ஆர்வத்தைக் கண்டறியும் கேள்விகள், நுண்ணறிவுத் திறன் (ரீசனிங்) தொடர்பான கேள்விகள், ஆங்கில வினாக்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். நுழைவுத் தேர்வு மதிப்பெண் 80 சதவீதமும், பிளஸ்-2 மதிப்பெண் 20 சதவீதமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பதால், எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உரிய இடஒதுக்கீடு உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும். மற்ற பிரிவு மாணவர்களில் 50 சதவீதம் பேருக்கு மெரிட்அடிப்படையில், குடும்ப ஆண்டு வருமானத்தைக் கணக்கில் கொண்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு முற்றிலும் உறைவிட படிப்பு ஆகும். வரும் கல்வி ஆண்டுக்கான (2014-2015) பி.எஸ்சி., பி.எட். மாணவர் சேர்க்கை அறிவிப்பை மண்டலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Regional Institute of Education) வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஆன்லைனில் (www.rieajmer.raj.ac.in) விண்ணப்பிக்கலாம்.

                கடந்த 2012, 2013-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆன்லைனில் பதிவுசெய்யக் கடைசி நாள் ஏப்ரல் 21. பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளக் கடைசி நாள் ஏப்ரல் 28-ம் தேதி ஆகும்.மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பதால், எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உரிய இடஒதுக்கீடு உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும். மற்ற பிரிவு மாணவர்களில் 50 சதவீதம் பேருக்கு மெரிட்அடிப்படையில், குடும்ப ஆண்டு வருமானத்தைக் கணக்கில் கொண்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு முற்றிலும் உறைவிட படிப்பு ஆகும். வரும் கல்வி ஆண்டுக்கான (2014-2015) பி.எஸ்சி., பி.எட். மாணவர் சேர்க்கை அறிவிப்பை மண்டலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Regional Institute of Education) வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஆன்லைனில் (www.rieajmer.raj.ac.in) விண்ணப்பிக்கலாம். கடந்த 2012, 2013-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆன்லைனில் பதிவுசெய்யக் கடைசி நாள் ஏப்ரல் 21. பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளக் கடைசி நாள் ஏப்ரல் 28-ம் தேதி ஆகும்.நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாடு முழுவதும் 29 முக்கிய நகரங்களில் மே மாதம் 31-ம் தேதி நடத்தப்பட உள்ளது. நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மே 9-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

                பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பின்னர் ஜூன் 20-ம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மெரிட் பட்டியலை ஜூலை மாதம் முதல் வாரத்தில்வெளியிடுவார்கள். விண்ணப்பம், அட்மிஷன் நடைமுறை, நுழைவுத்தேர்வு பாடத்திட்டம் மற்றும் படிப்பு குறித்த முழு விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்திலும், என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்திலும் (www.ncert.nic.in) விரிவாக அறிந்துகொள்ளலாம்.மண்டலக் கல்வியியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் கேந்திரிய வித்யாலயா,டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்பட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் திறம்படப் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். படிப்பில் சேரும் மாணவ-மாணவிகள் இறுதி ஆண்டு படிக்கும்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும்தயாராகிவிட்டால், தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகக் கல்விப்பணியையும் கையோடு தொடங்கிவிடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive