Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC - அறிவியல் பாட வினாத்தாள் நியாயமற்றதாக உள்ளது.


        நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் வினாத்தள் தொடர்பாக ஆசிரியர்களின் விடைகளையும் விளக்கங்களையம் பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது. 

           தற்பொழுது கேட்கப்பட்ட கேள்விகள் அல்லாமல் கேட்கப்படாத புத்தகத்தில் உள்ள இன்னும் பல கேள்விகள் விவாதத்திற்குறியனவாகவே உள்ளன். எனவே தவறான கேள்விகளை சரியாக‌ மாற்றாமல் அவற்றிர்க்குரிய விடைகளில் விவாதத்தில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்.
      மேலும் மற்ற படங்களை ஒப்பிடும்போது அறிவியல் பாட வினாத்தாள் நியாயமற்றதாக உள்ளது. ஒரு வார்த்தையில் விடை எழுதி விட்டு இரண்டு மதிப்பெண் வழங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம்.எனவே அறிவியல்பாட வினாத்தாளின் வடிவமைப்பையே மாற்றினால் நன்றாக இருக்கும்.
                         வடிவம்
1. சரியான விடையை தேர்ந்தெடு                      10*1=10
2. பொருத்துக                                          5*1= 5
3. இரு மதிப்பெண் வினா (16 பாடங்கள்)                16*2=32
   (வரையறை,கரணம் கூறு, கணக்கு போன்று )
4. கொடுக்கப்பட்ட படங்களை கண்டறிந்து
     குறிப்பெழுதுதல்                                                                                2*2=04
5. கேட்கப்பட்ட படங்களை வரைந்து பாகங்களை
     குறித்தல்                                                                                             2*2=04
6. விரிவான விடையளி                               4*5=20
                                 கூடுதல்                75
ஆசிரியர்கள் ஆமோதிப்பீர்களா?                       

நன்றி.                        அன்புடன்
                             த. சரபோஜி
                            பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்)
                            அரசு பெ மே.நி.பள்ளி,
                            மணல்மேடு.  609202
E-Mail ID : tsaraboji@yahoo.in
                                




9 Comments:

  1. very good opinion. In science they give 25 marks for practical. But majority of the schools do not conduct practicals. Many of the schools do not have lab fecilities also.Simply they give 25 marks to the students.We are not able to conduct practicals even for 12th std. In this level think of 10th std. In theory the question pattern is very poor. We no need 2 1/2 hrs for this. .

    ReplyDelete
  2. என்ன சொல்ல வரீங்க சார்?

    ReplyDelete
  3. Exactly. There is no need for understanding, skill, application. If they read 150 questions they can secure 100 marks.is it correct? Are we going in the right path?

    ReplyDelete
  4. தேர்வெழுதும் அனைத்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற (அரசு விருப்பப்படி!!!!!!!) புத்தகத்திலுள்ள வினாக்கள் 50 (அல்லது 67) மதிப்பெண்களுக்கும் (2/3 வினாக்கள்), மீத்திறன் மாணவர்கள் தன் திறமையை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற (கல்வித்தரம் உயர விரும்பும் கல்வி ஆர்வலர்களின் விருப்பப்படி!!!!!!!) தயாரிக்கப்பட்ட வினாக்கள் 25 (அல்லது 33) மதிப்பெண்களுக்கும் (1/3 வினாக்கள்) அமையுமாறு வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவரின் கல்வித்தரம் உயரும். மனப்பாடம் செய்து 100 க்கு 100 எடுப்பது தவிர்க்கப்படும். மாணவரின் அறிவியல் மனப்பான்மை, சிந்திக்கும் ஆற்றல், பயன்படுத்தும் திறன், சிக்கலைத் தீர்க்கும் தன்மை, . . . போன்றவை வளரும். இவ்வாறு அனைத்து பாட (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) வினாத்தாள்கள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் பிராய்லர் கோழிகளாக உருவாக்கப்படக்கூடாது.

    அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் 100 மதிப்பெண்களுக்கே உருவாக்கப்பட வேண்டும். ஒரு மாணவர் அறிவியல் பாடத்தில்பெறும் மதிப்பெண்ணை 75 க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இரு வினா என 32 வினாக்கள்) 32*1=32
    2. பொருத்துக
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இரு வினா என 08 வினாக்கள்) 08*1=08
    3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எட்டு வினாக்களில் ஐந்து வினாக்கள்
    என 20 வினாக்கள்) 20*2=40
    4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு வினா என 04 வினாக்கள்) 04*5=20

    மொத்தம் 100

    ReplyDelete
  5. ஒரு கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் இருப்பதால் அதை எளிதென கொள்வது கூடாது. 75 மதிப்பெண்ணுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்படினும் தரமான பள்ளிகளில் முழு அளவில் பாடங்கள் தயார்செய்யப்பட்டு எதுவாகினும் எதிர்கொள்ளும் திறனுடன் தான மாணவர்கள் உருவாகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவும்..

    ReplyDelete
  6. ஒரு கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் இருப்பதால் அதை எளிதென கொள்வது கூடாது. 75 மதிப்பெண்ணுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்படினும் தரமான பள்ளிகளில் முழு அளவில் பாடங்கள் தயார்செய்யப்பட்டு எதுவாகினும் எதிர்கொள்ளும் திறனுடன் தான மாணவர்கள் உருவாகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவும்..

    ReplyDelete
  7. what about the 14th question in sslc question paper???????
    please! someone recommend to give marks for both CONCAVE and CONVEX!!!!!
    this question is actually spoiling my school's and also my centum in science!!!!!!
    ( MIRUTHULA )












    ReplyDelete
  8. Don't worry.
    The correct answer is CONVEX.
    The Government has directed to give one mark for CONCAVE also.
    Be relax.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive