மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி
கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சில இடங்களில், மதுக்கடைகளை
மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர்
பங்கேற்கின்றனர்; இதனால், அவர்களது கல்வி பாதிக்கிறது. கல்வி பாதிக்காமல்
தவிர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு
ஆசிரியர்களுக்குஉள்ளது.இதுபோன்ற போராட்டங்களில், பங்கேற்கக்கூடாது என, மாணவ
- மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பிரார்த்தனை கூட்டங்கள், நீதி
போதனை வகுப்பு மற்றும் பாட வேளைகளில், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ
மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...