Home »
» TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி
சார்பில் புள்ளியியல் உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 23 காலி
பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது.
இத்தேர்வுக்கான ரிசல்ட் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in,
www.tnpscexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல, இந்து சமய அறநிலையத்துறை செயல்
அலுவலர்(கிரேடு 3) பதவியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான எழுத்து
தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி
வருகிற 31ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை
அலுவலகத்தில் தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள
தவறினால், அவர்கள் அடுத்தக்கட்ட தேர்வு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகி
விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...