NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

        வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 
 
      நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றையபொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும்.நாட்டில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.
வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.செல்லாது என்று அறிவித்தநாளில் இருந்து வங்கிகள் நாளுக்கொரு அறிவிப்பும் பொழுதொரு விதிமுறைகளையும் கடைபிடிக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி கூறி வருகிறது.முதல் நாள் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மறுநாள் வங்கி செல்லும்போது வேறு ஒரு புதிய அறிவிப்பு அவர்களை வரவேற்கிறது. அந்த அறிவிப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள்சண்டைபோட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து கூட அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அன்றாடம் மாறும் ஆர்.பி.ஐ-யின் புதிய உத்தரவுகளால் திணறுகின்றனர். வங்கிகளுக்குச் செல்வதற்கு முன்  சில தகவல்களையாவது தெரிந்துகொண்டு சென்றால் ஓரளவு குழப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?
 1. 25.11.2016  முதல் வங்கிகளில் 500 ரூபாய் 1000ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.

2. அடுத்த மாதம்  டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.

3. ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும்.

4. ஒரு முறைக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்

5. ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.

6. பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். 1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில்மட்டுமே போட முடியும்

7.வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு 5 ஆயிரம் என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம் . வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.

8. 2000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.

9. உங்கள் கணக்கில் இருந்து  ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப்புகார் தெரிவிக்கலாம்.

10.புதிதாக வந்துள்ள 500 ரூபாய் தாளில் சில தவறுகள்உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர்.   அதேபோன்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள்.

இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவருமானவரித்துறை விசாரணை நடத்தும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive