அரசு நடுநிலை,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பது வரை படிக்கும் அனைத்து
மாணவ, மாணவியரும், ஒரே நேரத்தில் பள்ளி சுற்றுச்சுவர்களில் ஓவியம் வரைய,
நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவ, மாணவியரின் ஓவியத் திறமையை கண்டறியும் வகையில், பள்ளிக் கல்வித்துறை
சார்பில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, 3
அடிக்கு, 3 அடி என்ற சதுர அடி கணக்கீட்டில், 9 சதுர அடி பரப்பளவில் ஒவ்வொரு
மாணவ, மாணவியருக்கும் இடம் தரப்பட்டது. மாவட்டம் முழுவதும், 17 ஆயிரத்து,
794 மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில், 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில்
ஓவியங்களை வரைந்தனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை
பேரிடர், மின் சேமிப்பு, தேசத் தலைவர்கள், இலக்கிய நீதிக் கதைகள்,
நுகர்வோர் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளின்
கீழ், வண்ண வண்ண ஓவியங்களை வரைந்தனர். ஒவ்வொரு பள்ளியிலும், சிறந்த, மூன்று
ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Public Exam 2026
Home »
» 1.60 லட்சம் சதுர அடி பரப்பில் மாணவ, மாணவியர் ஓவியம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...