Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தின பலன் 4.11.2016

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
மிதுனம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
 
  கன்னி
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
 
துலாம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
 
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
 
தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
மகரம்
பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துச் செல்லும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
மீனம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive