1ம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ. 1 லட்சம் வாங்கிய KV பள்ளி முதல்வர் கைதுசென்னை  கே.கே.நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போது லஞ்சம் வாங்கிய அந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பள்ளி முதல்வர் ஆனந்தனை  சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.  ஒரு மாணவரின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றபோது சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போது ஒரு தலித் மாணவரின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தலித் கோட்டாவின் அடிப்படையில் தலித் மாணவரின்
பெற்றோரிடம் அந்த பள்ளி முதல்வர் ஆனந்தன் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் மாணவரின் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் ஆனந்தனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட முதல்வரை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பள்ளி முதல்வர் ஏற்கனவே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளாரா என்ற கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this

1 Response to "1ம் வகுப்பு சேர்க்கைக்கு ரூ. 1 லட்சம் வாங்கிய KV பள்ளி முதல்வர் கைது"

Dear Reader,

Enter Your Comments Here...