சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என  மத்திய அரசு அறிவித்துள்ளது.  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனையடுத்து கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு தேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர், சிபிஎஸ்இ அதிகாரிகள், பயிற்சி வகுப்புகளை நடத்துவோர் உள்ளிட்ட 50 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் அப், ட்விட்டர் மூலம் சிபிஎஸ்இ வினாத்தாள் மாணவர்களுக்கு சென்றடைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆணைப்படி தேர்வு மைய கண்காணிப்பாளர் கே.எஸ்.ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மற்றும் சிறுவர்கள் 9 பேர் மீது சிறார் சீர்திருத்த பிரிவு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மறுதேர்வு: கேள்வித்தாள் வெளியானதால் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று மத்திய பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித பாடத்திற்கான தேர்வு தேதி அடுத்த 15 நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Share this

0 Comment to " சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...