10வது கணிதத் தேர்வில் திணறிய மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 3 ஐந்து மதிப்பெண் வினாக்கள் புதுமையாக கேட்கப்பட்டுள்ளன. சில வினாக்கள் புத்தகத்தில் இருந்தாலும், அதன் விடைகள் கேள்வித்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி மாணவர்களுக்கும், படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கும் சிரமமாக இருந்துள்ளது.

இதுப்போன்று கடினமாக இருந்ததால் தேர்வு அறைகளில் மாணவர்கள் திணறியுள்ளனர். இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று என்று கணித ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததால், இந்த ஆண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதோடு இது தேர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழக கல்வித் துறை அமைச்சர் இதில் உரியத் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குத் தமிழக கல்வித்துறை அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. எனினும் தேர்வு முறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் மாணவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளையே எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ ஒரு மாத காலம் இந்தத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஒரு மாத காலத்துக்கும் மாணவர்கள் தேர்வு பயத்திலேயே இருக்கின்றனர்.

இதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்து கல்வித்துறை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாளும் கடுமையாக இருந்தது எனப் புகார் எழுந்தது. இப்போது கணித ஆசிரியர்களே திக்குமுக்காடும் விதத்தில் கணிதத்துக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை கல்வி தரத்தை உயர்த்துவதற்கு ஒரு போதும் உதவாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட முறைக்கு மாறாகப் பொதுத்தேர்வு வினாக்கள் அமைந்திருப்பது மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இதே மனநிலையில் மீதமுள்ள தேர்வுகளையும் அவர்கள் எழுதினால் நிச்சயம் சிறப்பான முறையில் தேர்வை எழுத முடியாது.

எனவே, வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமான அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share this

1 Response to "10வது கணிதத் தேர்வில் திணறிய மாணவர்கள்! "

  1. Don't give grace marks. These are all humbac.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...