தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம் 16க்குள் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்திற்காக, வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும், தனியார் சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு சார்பில், சுயநிதி கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது. இந்த கமிட்டியின் சார்பில், வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு, பல பள்ளிகள் விண்ணப்பிக்கவில்லை. அந்த பள்ளிகளின் பட்டியலை எடுத்து, வரும், 16ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 
இதற்கான பட்டியல் http://tamil nadufeecommittee.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம் 16க்குள் விண்ணப்பிக்கலாம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...