72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில் இன்று டில்லி ஜனாதிபதி மாளிகையில் 2வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண், நாட்டுப்புறபாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Share this

0 Comment to " 72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...