தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாம்பூலத்தட்டுகளை வழங்கி ஆண்டு விழாவுக்கு வருமாறு அரசுப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.

தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ்  : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி

எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை ஏப்.17 ம் தேதி கல்வி கலைத் திருவிழாவாக
நடத்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, அழைப்பிதழுடனும் தாம்பூலத்தட்டையும் மாணவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.

தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இவ்வொன்றியத்திலேயே 250 கல்விப்புரவலர்களை கொண்ட முதன்மைப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளோம். இது பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும் உதவும், என்றார்.

Share this

0 Comment to "தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...