Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இஞ்சி ஜூஸ் அருந்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும்.


இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

உங்களுக்கு இஞ்சியின் துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட பிடிக்காது என்றால், அதனை ஜூஸ் போன்று செய்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சி ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்படும்:

இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவ சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

மறதி தள்ளிப் போடப்படும்:

 இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

புற்றுநோய்:

இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

இரைப்பைக் குடல் புற்றுநோய்:

இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்:

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.

ஆர்த்ரிடிஸ் வலி: (கீல்வாதம்)

இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பவர்கள், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.


Third party image reference
எப்படி இஞ்சி ஜூஸ் தயாரிப்பது?

இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்று தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.

குளிர் மற்றும் காய்ச்சல்:

சீன மருத்துவ பயிற்சியாளர்கள் பொதுவாக ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை சிகிச்சை செய்ய இஞ்சி பரிந்துரைக்கின்றனர். வேர் செயல்படுகிறது ஒரு ஆண்டிஹிச்டமின்கள்(antihistamine) மற்றும் இரத்தச் சேர்க்கை நீக்கும்(decongestant) அறிகுறிகள் உதவும் இரண்டு குளிர்-தளர்த்துவது விளைவுகள்.

குமட்டல் மற்றும் இயக்கம் நோய்:

இஞ்சி குமட்டல் எளிமையாக்கும் திறனுக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது, அது இயக்கம் மற்றும் கடல் வியாதிக்கு உதவுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive