மத்திய அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பில், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்' என, பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
அனுமதி : மத்திய அரசு பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை விபரம்:மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களது குழந்தைகளுக்கு, 18 வயது ஆகும் வரை, சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது. தங்கள் பணிக்காலத்தில், 730 நாட்கள், சி.சி.எல்.,லாக, அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.இந்த விடுப்பில் செல்வோர், வெளிநாட்டு பயணம் செல்லவும், தற்போது அனுமதி அளிக்கப்பட உள்ளது. சி.சி.எல்., விடுப்பு காலத்தில், எல்.டி.சி., எனப்படும், சுற்றுலா விடுப்பு சலுகையையும், அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.விடுமுறைஎல்.டி.சி.,யில், சுற்றுலா பயணம் செல்லவும், திரும்பி வரவும் ஆகும் செலவு தொகையை பெற்றுக் கொள்ளலாம்; சுற்றுலா பயண நாட்கள் விடுமுறை நாட்களாக கருதப்படும். சி.சி.எல்.,லில் வெளிநாட்டு பயணம் செல்ல, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " மத்திய அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...