பாட சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., முடிவு

மனப்பாட கல்விக்கான பாட சுமையை குறைக்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில், மாணவர்களின் வயது மற்றும் தகுதிக்கு அதிகமான, பாடங்கள் இடம் பெற்றுள்ளதால், அவர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக, பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனால், பாடத்திட்டத்தின் சுமையை குறைக்க, சி.பி.எஸ்.இ., முன் வந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள், ஒரு மாதத்திற்கு முன் துவங்கின. மனப்பாட கல்வியை மாற்றி, வாழ்வியல் நெறிகள், தனித்திறன் வளர்ப்பு, ஒழுக்க கல்வி என, பாடத்திட்டத்தை, முழுமையான வகையில் உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, வரும், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், mhrd.gov.in/ என்ற இணையதளத்தில், கருத்துக்களை பதிவு செய்யலாம்.

Share this

0 Comment to " பாட சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., முடிவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...