தேசிய தூய்மை பள்ளி விருதுகள் 2017 - 18 | நாட்டிலேயேமுதலிடம் பெற்ற அரசுப் பள்ளி எது தெரியுமா?

தேசிய தூய்மைப் பள்ளி விருது
2017-18-ம் ஆண்டுக்கான பட்டியலில்
புதுச்சேரி கூனிச்சம் பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து 2016-17-ம் கல்விஆண்டு முதல் தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளி விருது (ஸ்வச் வித்யாலயா) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகி றது.2017-18-ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட 727 பள்ளிகள், தேசிய விருதுக்காக போட்டியிட்டன. இதில் தேசிய அளவில் விருது பெற 52 பள்ளிகள் தேர்வு செய்யப் பட்டன. இந்தப் பட்டியலில் புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்றுநாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
இவ் விருதை செப்.18-ம் தேதி டெல்லி யில் நடைபெறும் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கவுள்ளார்.விருது பெறும் பள்ளிக்கு சுகாதாரம் பேணுவதற்காக பள்ளி மானியமாக ரூ.50,000 ரொக்கம், சிறந்த பணிக்கான அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகளை பெற இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர், மாணவர் சுகாதாரத் தூதுவர் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.
புதுவைக்கு அடுத்தப்படியாக ஆந்திர மாநிலம் 3 விருதுகளை பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Share this