மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு
ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு 7% ல் இருந்து 9%ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு
கூடுதலாக ரூ.1157 கோடி செலவு ஏற்படும்.
அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு
ரூ.314 முதல் ரூ.4500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு
ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...