4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏதேனும்
புதிய சேவையை துவங்கினால் அந்த குறிப்பிட்ட சேவையை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தது.

தற்போது, ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையில் நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது 4 மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது.

இதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு திட்டங்களில் ரீசார்ஜ் செய்வோருக்கும் சலுகைகள் வழங்கபப்டுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இந்த சேவையை பெற யு பிராட்பேன்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Share this

0 Comment to "4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...