காலாண்டு தேர்வில் 80% கேள்விகள்
புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.கேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாட திட்டத்தில் பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வில் இதற்கு முன் இருந்த கேள்வித்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக கேள்வித்தாள் வடிவமைப்பு பிளஸ் 1 பிளஸ் 2 என இரண்டு வகுப்புகளுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இணையதளம், வாட்ஸ்அப் போன்றவற்றில் சில தனியார் ஆசிரியர் அமைப்பினர் கேள்வித்தாள் வடிவமைப்பை கடந்த வாரம் வெளியிட்டர். இதை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.
இதற்கு முன் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகள் தான் தேர்வில் 95% கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் இருந்து அனைத்து கேள்விகளும் புத்தகத்தினுள் பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் எந்த பாடத்தில் எங்கிருந்து கேள்விகள் வரும் என புரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத கேள்விகள் புத்தகத்தில் உள் பகுதியிலிருந்துதான் கேட்கப்பட்டிருந்தது.
புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இறுதியில் வெளியான ஒரு சில கேள்விகள் மட்டும் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. இந்த வினாத்தாளை பார்த்து அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர் கலக்கமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.
கேள்வித்தாள் மாணவர்களுக்கு சற்று கடினமாக தான் இருந்திருக்கும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது
பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடதிட்டம் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் மிரள செய்துள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் சுமார் 800 பக்கங்கள் கொண்டதாக புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதில் காலாண்டு தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை பல பள்ளிகளில் நடத்தி முடிக்க முடியவில்லை.
குறிப்பாக கணிதத்தில் காலாண்டு தேர்வுக்கு புதிய பாடதிட்டத்தில் ஆறு சேப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாலு சேப்டர்களை கூட ஆசிரியர்களால் நடத்தி முடிக்க முடியவில்லை. ஒவ்வொரு சேப்டரிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கணமும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. இதை மாணவர்களுக்குப் புரிய வைக்கவும், பாடங்களை நடத்த போதுமான கால அவகாசம் இல்லை. அதற்குள் காலாண்டு தேர்வு வந்துவிட்டது.
பிளஸ் 1 தமிழ், ஆங்கிலத்தில் மூன்று பாடங்கள் காலாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் அனைத்தும் அதிகப் பக்கங்களைக் கொண்ட வராகவும் ஏராளமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தி முடித்தாலும் பாடங்கள் மாணவர்கள் மனதில் எந்த அளவுக்கு புரிந்துள்ளது என்பது சந்தேகம்தான். இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற படங்களிலும் காலாண்டு தேர்வுக்கு உரிய பாடங்களை முடிக்க இயலவில்லை. 4500 பக்கங்கள் கொண்ட பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் மாணவ மாணவியர் உள்வாங்கிக்கொண்டு அரசு பொது தேர்வு எழுதுவதில் பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆசிரியர்கள் கூறினர்.
Katrathu kaiyalavu.......😇
ReplyDeleteKatrathu kaiyalavu......������
ReplyDeleteKatrathu kaiyalavu......😂😂😂
ReplyDeleteKatrathu kaiyalavu......������
ReplyDeleteKatrathu kaiyalavu......😂😂😂
ReplyDeleteKatrathu kaiyalavu......😂😂😂
ReplyDeleteநடத்தாததால் அதிர்ச்சியா?
ReplyDelete