பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரில்லை : பெற்றோர் குற்றச்சாட்டு; கல்வி துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், மெட்ரிக்.,
பள்ளிகளில், 70 சதவீதம் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார், கூடலுார் கல்வி மாவட்டத்தின் கீழ், 63 மெட்ரிக்., பள்ளிகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட கல்வி துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், 70 சதவீதம் மெட்ரிக்., பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பள்ளிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.முக்கியத்துவம் இல்லை!
மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இங்குள்ள மெட்ரிக்., பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்காமல், பிற பாட ஆசிரியர்களை கொண்டு மாணவர்களை தயார்படுத்தி, போட்டிகளில் பங்கேற்க செய்யும் விதிமீறல் நடந்து வருகிறது. பல பள்ளிகளில் போதிய மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான, ஸ்கிப்பிங் கயிறு, சதுரங்க பலகை, வாலிபால் உள்ளிட்டவை கூட இல்லாதது தெரியவந்துள்ளது. சில மெட்ரிக்., பள்ளிகளில், விளையாட்டு பிரிவே இல்லை என்பது, பல பெற்றோரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், மாவட்டத்தில் நடத்தப்படும் குறுவள விளையாட்டு போட்டிகளில், தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்பது குறைந்து வருகிறது.
இந்த குறைபாடுகளுக்கு, 'உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பிற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவது முக்கிய காரணம்' என, விளையாட்டு ஆர்வர்களின் ஆதங்கமாக உள்ளது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில், சில மெட்ரிக்., பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு போது, அங்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாதது தெரியவந்தது.
ஆய்வு நடத்தப்படும்!மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் கூறுகையில், ''பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் கட்டாயமாக பணியமர்த்தி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இம்மாவட்டத்தில், குறிப்பாக மெட்ரிக்., பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பிற பாட ஆசிரியர்களை கொண்டு விளையாட்டுகளை நடத்தி வருவதாக புகார் வந்ததை அடுத்து, சில பள்ளிகளில் ஆய்வு செய்து உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தி உள்ளோம். மீண்டும் ஆய்வுகள் நடத்தப்படும்,'' என்றார்.

Share this

0 Comment to "பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரில்லை : பெற்றோர் குற்றச்சாட்டு; கல்வி துறை எச்சரிக்கை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...