தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல்
துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Architectural Assistant/ Planning Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018
மேலும் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_18_Architectural_Planning_Asst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share this

0 Comment to "தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...