அழகான முழங்கால்கள் பெற வேண்டுமா?வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், கருமையைப் போக்கலாம்.

கடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, உலர வைத்து, கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கருமை மறையும்.

கற்றாழை ஜெல்லை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், கருமை மறையும்.

திராட்சையின் சாற்றினை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி நன்கு தேய்த்து, உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறையும்.

Share this