அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் மேலாண்மை அமைப்பு என்ற பெயரில், அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு சார்பில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அலைபேசியில் உள்ள, 'ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்' பகுதியில், 'எஸ்.சி.எம்.எஸ்., அண்ணா பல்கலை' என்ற பெயரில் உள்ள இதை, பதிவிறக்கம் செய்யலாம்.இதில், மாணவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். முதல் கட்டமாக, சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி; கிண்டி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்கள், இந்த, 'ஆப்' வசதியை பயன்படுத்த உள்ளனர்.இதில், ராகிங் குற்றத்துக்கான தண்டனை விபரம், புகார் செய்ய வேண்டிய முகவரி, அலைபேசி எண், அவசர உதவிக்கான அழைப்பு எண் போன்றவை உள்ளன. விரைவில், மற்ற பல்கலைகளின் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில், இது விரிவுபடுத்தப்பட உள்ளதாக, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...