ஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர், மாணவர் மற்றும் மக்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற தலைப்பிலும், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், மக்களுக்கு எங்க ஊரு.. எங்க பள்ளி.. என்ற தலைப்பிலும் எழுத வேண்டும்.
ஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.
ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். படைப்பு புதியதாகவும், சொந்த கட்டுரையாகவும் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை செப்., 10 க்குள் புலவர் தா.காளிராசா, ஆசிரியர் தின மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 307, தமிழ்க்குடில், அழகாபுரி அஞ்சல், கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம் -630556 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விபரங்களுக்கு 98945 23840 ல் தொடர்பு கொள்ளலாம் என, அறிவியல் இயக்க மாநிலத் துணைத்தலைவர் சாஸ்தாசுந்தரம் தெரிவித்தார்.

Share this

0 Comment to "ஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...