திறனாய்வு தேர்வு: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வு நடைபெற்றது.இத்தேர்வினை 2701 மாணவ,மாணவிகள் எழுதினார்கள்.இத்தேர்வு நடைபெற்றதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.            
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளில் ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த முறையில் 2018- 2019 -ஆம் கல்வி ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் பதிவு செய்திருந்த மாணவ,மாணவிகளுக்கு ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 12 மையங்களில் இன்று23-09-2018
(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.இதில் 12 தேர்வு மையங்களில் ஒதுக்கீடு செய்திருந்த 2958 மாணவ,மாணவிகளில் 2701 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.257 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திலும்,புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திலும் நடைபெற்ற ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை,
அறந்தாங்கி,இலுப்பூர் ஆகிய 3கல்வி மாவட்டங்களிலும் நடைபெற்ற ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வினை மாவட்டக்கல்வி அலுவலர்களும்,பள்ளித்துணை ஆய்வாளர்களும் பார்வையிட்டனா்..

Share this

0 Comment to "திறனாய்வு தேர்வு: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...